Morning பூஜா ஹெக்டே வந்தாங்க.. Night நீங்களா..! மாளவிகா மோனாவின் போட்டோவை பார்த்து கிறுகிறுத்த ரசிகர்கள்..!
Author: Rajesh15 February 2022, 6:49 pm
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை ரசித்து ருசித்து வருகின்றனர்.