எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவகத்திற்கு நடிகை மஞ்சு வாரியர், நேரில் வந்து, அதிகாரிகள் முன்னிலையில் பைக் ஓட்டி காட்டி அதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்றிருக்கிறார்.
நடிகர் மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த அசுரன் திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கிய அப்படத்தில் நடிகர் தனுஷுக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மஞ்சு வாரியர், அஜித்தின் துணிவு படம் மூலம் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
துணிவு படத்தில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித்தின் டீம் மேட்டாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். துணிவு படத்தில் சண்டைக் காட்சியிலும் துணிச்சலாக நடித்து ஆக்ஷன் ஹீரோயினாக அதகளப்படுத்தி இருந்தார். துணிவு படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள மஞ்சு வாரியர், தற்போது டூவீலர் லைசன்ஸ் வாங்கி உள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவகத்திற்கு நேரில் வந்து, அதிகாரிகள் முன்னிலையில், நடிகை மஞ்சுவாரியர் பைக் ஓட்டி காட்டி அதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்றிருக்கிறார். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக துணிவு பட ஷூட்டிங் சமயத்தில் லடாக் பகுதியில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் சேர்ந்து பைக் டிரிப் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பைக் ரைடிங்கின் மீது மஞ்சு வாரியாருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தற்போது லைசன்ஸ் வாங்கி உள்ளாராம். இனிமேல் அஜித்தைப் போல் மஞ்சு வாரியரும் அடிக்கடி பைக்கில் சுற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.