சத்தமில்லாமல் நடிகை மீனாவிற்காக நடக்கும் FUNCTION :.. ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களுக்கு அழைப்பு..!
Author: Rajesh5 February 2023, 4:30 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். தெறி படத்தில் விஜய் மகளாக நடித்து நைனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். தனது பிறந்த நாள் கொண்டாட்டம், தோழிகளுடன் வெளியே செல்வது, ஷூட்டிங் என நேரத்தை செலவிட்டு வருகிறார். வித்யாசாகரின் மறைவுக்கு பின் மீனாவிற்கு உறுதுணையாக இருந்து வருபவர் கலா மாஸ்டர்.

இந்நிலையில், சத்தமில்லாமல் மீனாவிற்காக ஒரு பங்ஷன் ஏற்பாடு ஒன்றை கலா மாஸ்டர் ஏற்பாடு செய்து வருகிறார். திரையுலகில் மீனா 40 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ள நிலையில், மீனா40 என விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளாராம் கலா மாஸ்டர்.
குழந்தை நட்சத்திரமாக 1982ல் நடிக்க துவங்கிய மீனா கடந்த 2022ம் ஆண்டுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் இந்த விழாவை நடத்த கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளாராம். இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.