போதும்டா சாமி .. இதோட நிறுத்துங்க.. 2-ம் திருமணம் குறித்து நடிகை மீனா உருக்கம்…!

Author: Vignesh
22 March 2023, 2:04 pm

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர்.

தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

Meena Husband Vidyasagar - Updatenews360

இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.

meena - updatenews360 2

இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடிகை மீனாவுக்கு 40வது பிறந்தநாளையொட்டி விழா எடுத்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நடிகை மீனா குறித்து, வெளியான பல்வேறு கிசுகிசுகளுக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

meena_updatenews360

அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா தன் கணவரை நினைத்து கண் கலங்கினார்.மேலும் 2-ம் திருமணம் குறித்து பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அப்போது பேசிய நடிகை மீனா, தன் கணவர் இல்லை என்பதையே தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும், அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்றே தனக்கு தெரியவில்லை எனவும், தற்போது தன் மகளின் எதிர்காலம் பற்றியும், தன் படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருவதாக மிகவும் உருக்கமாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!