Adjust பண்ணிக்க முடியாது.. குழந்தை இருக்கு.. பிரபலத்திடம் கறாராக பேசிய மீனா..!
Author: Vignesh31 October 2023, 11:35 am
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இது குறித்து பேசிய பேட்டி ஒன்றில் மீனா பல நாட்கள் முடிந்து எனக்கு கம்பேக் தந்த படம் திரிஷ்யம் அந்த கதையை கேட்ட பிறகு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இருந்ததால் நான் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் எனக்கு இப்போது இந்த படம் பண்ண முடியாது ரொம்ப கஷ்டம் ஏனென்றால், எனது குழந்தை இருக்கு, இப்பொழுது தான் இரண்டு வயது ஆகிறது.
மிகவும் சிறிய குழந்தை விட்டு விட்டு வர முடியாது. அதனால், இந்த நேரத்தில் இதை என்னால் பண்ண முடியாதென்று தயாரிப்பாளரிடம் தெரிவித்துவிட்டாராம். ஆனால், சரி என்று சென்றுவிட்ட பட குழு மீண்டும் வந்து நீங்கள் அல்லாமல் வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. நீங்களே, பண்ணி கொடுத்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு என்ன வசதி வேண்டும் என்றாலும் நாங்கள் செய்து கொடுக்கிறோம். தயவுசெய்து, வாங்க என்று சொன்னார்கள். அப்படித்தான் அந்த படத்தை நான் செய்து கொடுத்தேன் என்று மீனா பேசியுள்ளார்.