கணவர் மரணம்: சோக பிடியில் இருந்து மீண்ட நடிகை மீனா..! இப்போ எங்க எப்படி இருக்காங்க தெரியுமா..?

Author: Vignesh
29 December 2022, 7:30 pm

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி இருக்கிறது.

சிறுவயதில் இருந்து நடித்துவரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இடையில் தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், அவருக்காக அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.

meena - updatenews360 3

கணவர் இழப்பை தாங்க முடியாத மீனா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து வெளியே வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டு வருகிறார்.

மேலும், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்பட்ட நிலையில், அது உண்மையான தகவல் இல்லை என அதன்பின் தெரியவந்தது.

meena

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை நடிகை மீனா வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை அவரே வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!