நடு ரோட்டில் ஆடை கழட்ட சொன்ன இயக்குனர்… மீனாவின் துயரத்தை சொன்ன ராஜ்கிரண்!
Author: Shree6 June 2023, 7:04 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். அண்மையில் கூட மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா குறித்து பேசியுள்ளார். அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அப்போது மீனாவின் வயது 15 தான். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மீனா ஆடை மாற்றவேண்டும் என இயக்குனர் கூற நடு ரோட்டிலே காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு ஆடை மாற்றிக்கொண்டு வந்து நடித்தார். அப்போது இந்த கேரவன் வசதியெல்லாம் கிடையாது என ராஜ் கிரண் கூறினார்.