சமந்தா ஓரமா போயி உட்காருமா… புஷ்பா பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை மீனா– Video..!
Author: Vignesh20 May 2024, 6:12 pm
சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.

மேலும் படிக்க: காதலில் சொதப்பி… 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய 44 வயது பிளேபாய் நடிகர்..!
இந்நிலையில், நடிகை மீனா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா படலில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருப்பார். இதனால், இந்த பாட்டு பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான நிலையில், இந்த படமும் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள புஷ்பா புஷ்பா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகையான மீனா இந்த பாடலுக்கு நடமாடிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
மேலும் படிக்க: புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யாருனு கண்டுபிடிங்க.. இந்த இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே..!