கணவர் மறைவிற்கு பின் பிரபல ரியாலிட்டி ஷோவில் வேற மாறி லுக்கில் நடிகை மீனா.. வாவ்.. சூப்பர்..

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 12:00 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

Meena - Updatenews360

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். தெறி படத்தில் விஜய் மகளாக நடித்து நைனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். சமீபத்தில், மீனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். மேலும், தனது தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், படப்பிடிப்பில் இருப்பதாக மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் மீனா பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கணவரின் இறப்பிற்கு பின்னர் மீனா முதன் முறையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!