அஜித்தின் வாலி, விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் பிரபல நடிகை..!

Author: Vignesh
14 October 2022, 5:15 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

நடிகை மீனா சிறுவயதில் இருந்து குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இடையில் தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவர் இழப்பை தாங்க முடியாத நடிகை மீனா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வெளியே வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டும் வருகிறார்.

Meena (3)-Updatenews360

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ரிதமும் ஒன்று. ரிதம் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நிறைய படங்களின் பாடல்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டு நடனம் ஆடியதாகவும், ஆனால் முத்து படத்தின்தில்லானா தில்லானா என்ற பாடலுக்கு ஈஸியான ஸ்டெப் தான் இருந்ததாகவும், ஆனால் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி மிகப்பெரிய அளவு ஹிட் ஆகும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் கஷ்டப்பட்டு ஆடிய பாடல்களுக்கு கிடைக்காத வரவேற்பு இந்த தில்லானா தில்லானா பாடலுக்கு கிடைத்தது தனக்கு பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும், அதேபோல் கால்ஷீட் காரணமாக பல உச்ச நடிகர்களின் படங்களில் பண்ண முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

meena_updatenews360

அஜித் நடித்த வாலி, மற்றும் விஜய்யின் ப்ரெண்ட்ஸ் படத்தில் தான் நடிக்க வேண்டியது. ஆனால், தேதி பிரச்சனை காரணமாக அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து கூறிய அவர், ப்ரெண்ட்ஸ் படத்தின் மலையாள வெர்ஷனில் தான் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால், தமிழில் தேதி பிரச்சினை காரணமாக தனக்கு அந்த வாய்ப்பு தவறியதாக தெரிவித்தார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்