அந்த 2 பிளாக்பஸ்டர் படங்கள் மீனா நடிக்க வேண்டியதா?.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது..!

Author: Vignesh
13 June 2024, 7:21 pm

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக இவருக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருந்து வருகிறது. இவர் கணவரின் மறைவிற்கு பின்னர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா கமல் நடித்த தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான். இத்தனைக்கும் முதல் நாள் ஷூட்டிங் போயிட்டு ரெண்டு மூணு மேக்கப் போட்டு பார்த்தார்கள். ஷூட்டிங் ஒரு சீன் கூட முடிச்சிட்டோம். அடுத்த நாள் எடுத்த காட்சியின் போட்டுப் பார்த்தார்கள்.

meena - updatenews360 3

கமல் சாருக்கு அதன் கெட்டப்பில் திருப்தி இல்லை. அதனால் ஷூட்டிங் தாமதம் ஆனது. அந்த பத்து நாட்கள் என்ன பண்றதுனே தெரியல, ஆனா நாங்க கொஞ்சம் இப்படி அப்படின்னு பல்வேறு விஷயங்களை செய்தோம். மறுபடியும், ஷூட்டிங் கேன்சல்ன்னு சொன்னாங்க அதுக்கு அப்புறமா அவங்க என்னோட டேட் கேட்கும் போது என்னால கொடுக்க முடியல, அந்த சமயத்தில் நான் பிஸியா நடிச்சிட்டு இருந்தேன், அதேபோல் தான் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தேன் என்று மீனா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?