அந்த தப்பு பண்ணா என்ன? நடிகை மீனாவா இப்படி சொன்னாங்க? ரசிகர்கள் பகீர்!

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகாலும், சிரிப்பழகாளும் ரசிகர்களை வசீகரித்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றார். கோலிவுட்டில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனாவின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து இளமை பருவத்திலே ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை மீனா. தொடர்ந்து இவர் நடித்த வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் நடிகை மீனா.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் மீனாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகள் நைனிகா விஜய்யின் “தெறி” படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துவிட்டார்.

வித்யாசாகரின் மறைவிற்கு பிறகு மீனா மறுமணம் செய்துகொள்வாரா..? என்பது குறித்தும் இரண்டாம் திருமணம் குறித்தும் தொடர்ந்து வதந்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் மீனா வேறொரு நடிகருடன் ரகசிய உறவில் இருக்கிறார் என்றும் அவரை விரைவில் மறுமணம் செய்துக்கொள்ளப்போவதாகும் செய்திகள் வெளியாக அதை கேட்டு கோபத்தின் உச்சத்திக்கே சென்ற மீனா,

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள். நான் வேறொரு சிந்தனையிலும் வேளையிலும் கவனம் செலுத்தி வரும்போது இதுபோன்ற பொய்யான தகவல் என் மனதை உருக்குலைய செய்கிறது. இது என்னை மட்டும் அல்லாமல் என் குழந்தை நைனிகாவையும் பாதிக்கிறது. எனவே இதை இத்தோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள் என்றார் மீனா.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில், கிளாமர் காட்சிகளை நான் தவிர்த்த நேரத்தில் எனக்கு தெரிந்த நிறைய பேர் கிளாமர் ரோலை முயற்சிக்க கூடாதா என கேட்டனர், அதனால் நானும் முயற்சி செய்தால் என்ன என்று நினைத்து அந்த நீச்சல் உடையை அணிந்து நடிக்க தயார் ஆனேன்.

ஆனால், என்னால் அந்த உடை அணிந்துக்கொண்டு மேக்கப் அறையில் இருந்து வெளியே கூட வர முடியவில்லை. எனக்கு மிகவும் அசவுகர்யமாக இருந்தது. அப்போது தான் எனக்கும் கிளாமருக்கு செட்டே ஆகாதுன்னு தோணிடுச்சு. இந்த மாதிரியான கவர்ச்சி ரோல்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது என மீனா கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.