பிரபல நடிகருடன் இரவு விருந்தில் நடிகை மீனா.. வெளியான டின்னர் வீடியோ..!
Author: Vignesh28 December 2023, 12:15 pm
90களில் அதிக படங்களில் நடித்த கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்த உள்ளார்.
2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவருக்கு நயனிக்கா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நல குறைவால் காலமானார்.
இந்நிலையில், நெப்போலியன் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை கடந்த இரண்டாம் தேதி கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் உட்பட்ட பலருக்கும் பார்ட்டி கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு, நடிகை மீனா மற்றும் நடிகை குஷ்பூ சென்று இருக்கிறார்கள். பல ஆண்டு நண்பனுக்காக அமெரிக்காவுக்கு பறந்து சென்று வாழ்த்து கூறியதோடு அவர் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், அவர் எடுத்த புகைப்பட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்தும் அங்கு கிறிஸ்துமஸ் மரத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தையும் நடிகை மீனா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.