தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இந்நிலையில் தற்போது அவரது அம்மா பிந்து ஆகாஷ் தயாரிப்பில் மேகா ஆகாஷ் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேகா புகைபிடித்து கொண்டிருக்கிறார், இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டியர் மேகா படத்தின் இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் அசிஸ்டன்ட் அபிமன்யு பட்டி தான் இந்த படத்தை இயக்குகிறார். போஸ்டரில் மேகா ஆகாஷ் கையில் சிகரெட் இருப்பது போலவும், அதில் இருந்து சிதறிய சாம்பல் போல ஒரு நபர் விழுவது போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.