நீங்களா இப்படி…? உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறந்த மேனிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை!

Author: Shree
16 July 2023, 12:39 pm

வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான மிருனாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இந்தி தொலைக்காட்சியில் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான், குங்கும் பாக்யா ஆகிய தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக குங்கும் பாக்யா தொடரில் நடித்தபோது விருதுகளை வாங்கியிருந்தார்.அதே தொடர் தமிழில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பாகியது. அதன் பிறகு வெள்ளித்திரைகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். ஆனால் தொடர்ந்து இந்தியில் தோல்வியை சந்தித்ததால் மற்ற மொழியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்படி தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் ஹிட் ஆனது. அந்த படத்தில் நடித்த நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படத்தில் நடித்து எல்லோருக்கும் பேரதிர்ச்சி கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்ப்போது உடம்பில் ஒட்டுத்துணி அணியாமல் பிறந்தமேனிக்கு அப்படியே அரைநிர்வாண கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 752

    3

    7