தலைக்கேறிய போதை.. கையில் சரக்குடன் ஏடாகூடமாக போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்..!

Author: Vignesh
31 January 2024, 7:12 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

mrunal thakur - updatenews360

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

mrunal thakur - updatenews360

இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர் சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா படத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றார். இதேபோல், ஃபேமிலி ஸ்டார், பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்தும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மிருணாள் தாகூர் தற்போது, கையில் மது பாட்டிலுடன் போதையில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 545

    0

    0