கருப்பான கையாலே என்ன புடிச்சான்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை..!
Author: Vignesh27 February 2024, 10:22 am
2007 – ல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான நடிகைகளில் ஒருவர் நடிகை முக்தா. மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்தில் இவர் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார்.
தாமிரபரணி படத்தில் பானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று அடுத்தடுத்த, படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். தமிழில் ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்துள்ள முத்தா கதாநாயகி ரோலில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் அதன் பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
2015 ல் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிப்பிலிருந்து விலகி இருந்தார். கடைசியாக தமிழில் பாம்பு சேட்டை, சகுந்தலாவின் காதலன் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது, 32 வயதாகும் முக்தா மலையாள சீரியலில் நடித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி முக்தாவா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.