பிறந்தநாள் கொண்டாட்டம்..! உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய மும்தாஜ்..! Latest Video..!

Author: Rajesh
17 February 2022, 7:22 pm

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.

போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜயுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவரது அம்மா பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடினாரர். அப்போது உணர்ச்சி வசப்பட்டு அவரது அம்மாவை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 1728

    2

    0