தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.
போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே, நடிகை மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.
இந்நிலையில், 42 வயதாகும் மும்தாஜ் இன்னும் திருமணமே செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டி, ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு, “எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம். எனக்கு திருமணம் செய்துக்கொள்ளும் யோசனையே இல்லாமல் இருப்பது தான். எத்தனையோ ப்ரபோசல்கள் வந்துள்ளது. ஆனாலும் எனக்கு திருமணம் குறித்த எண்ணமே வரவில்லை. அதனால் தான் இப்படியே இருக்கிறேன் என அவர் கூறினார்.
மேலும், தான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததாகவும், தனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். தனக்கு சில விஷயங்களை அல்லாஹ் செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். ஆரம்பத்தில், அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது, தனக்குள் ஒரு மாற்றம் தொடங்கிய நிலையில், அதன் காரணமாகவே தான் சினிமாவில் இருந்து விலகியதாகவும், சினிமாவில் இருந்த விலக அல்லாஹ் தான் காரணம் என்றும், அவர் என்னிடம் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒரு நாள் என் வீட்டில் அமர்ந்திருந்தபோது விலகிய ஆடையை நானே என்னை அறியாமல் சரி செய்தேன். வெளியில் செல்லும்போது கண்ணியமாக ஆடை அணிய தொடங்கினேன். நீச்சல் உடை அணிந்து சினிமாவில் நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட உடை அணிவது நிச்சயம் அனைவருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நடிகை மும்தாஜ் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.