80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
ஒருமுறை தனது ஸ்வாரஸ்யமான காதல் கதை குறித்து மனம் திறந்து பேசிய நதியா ” நானும் என் கணவரும் சிறுவயது நண்பர்கள். என் பக்கத்துக்கு வீட்டு பையன் தான் அவர். முதலில் நாங்கள் நண்பர்களாக தான் பழகினோம். பின் அது காதலாக மாறியது. நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே அவரை காதலித்தேன். அதன் பின் வாய்ப்பு கிடைத்து நான் நடித்துவந்தேன். அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த காலத்தில் போன் கூட இருக்காது. லெட்டர் தான் எல்லாமே. ஒரு முறை அவர் அனுப்பிய லெட்டர் என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டது. பின்னர் அவர் படித்து வேலை வாங்கட்டும் அப்புறம் பார்ப்போம் என்றார்கள். நான் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் என் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். என் கணவர் நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பதால் ” உன்னால் குடும்பம் நடத்த முடியுமா? என்று கேட்டார் நானும் முடியும் என உறுதியளித்தேன். எங்களிடம் காசே இல்லாதபோது நாங்கள் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினோம் என நதியா தனது சுவாரஸ்யமான காதல் கதையை கூறினார்.
இந்நிலையில் நதியா தனது 34வது திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட சில பழைய நினைவுகளையும் வெளியிட்டு, “இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அன்பே… இதோ பல தசாப்தங்களாக எங்கள் காதல் மற்றும் சாகசங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து நதியாவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.