தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், திருமணம் செய்யாமல் தற்போது வரை ஒண்டிக்கட்டியாக வாழ்ந்து வரும் நக்மா 4 பிரபலங்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கி இருந்தார். அதாவது, நக்மாவின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் நடித்த போது நடிகர் சரத்குமாருடன் நடித்த சமயத்தில் இருவரும் ஜோடியாக நெருக்கமாக இருப்பதை பரபரப்பு செய்தியாகவே வெளியிட்டனர்.
அது மட்டும் இல்லாமல் ஈ சி ஆர் பகுதியில் ஆடம்பர பங்களாவில் இருவரும் சேர்ந்து வசித்ததாகவும், மேலும் சரத்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனக்கசப்பில் நக்மா இருந்து சரத்குமாரை பிரிந்துவிட்டார் என்றும், அப்போது செய்திகளில் வெளியானது.
பின்னர், நடிகர் கங்குலியுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த காதலும் சர்ச்சையாகி பாதியிலேயே பிரேக் அப்பில் முடிந்துள்ளது. பின்பு நடிகர் பிரபுதேவா உடன் நடித்த போது இருவரும் ஜோடியாகவும், நெருக்கமாகவும் முத்த காட்சிகளில் கூட நடித்து கிசுகிசுக்களில் சிக்கியது பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனையடுத்து, மேட்டுக்குடி, பிஸ்தா படத்தில் நடிகர் கார்த்தி உடன் நடிக்க நக்மா தான் வேண்டும் என்று கார்த்திக் அடம்பிடித்து நக்மாவை கமிட் செய்ததாகவும், அப்படி ஒரு நட்பு இருவருக்குள்ளும் இருந்துள்ளது என்றும் பேசப்பட்டது. 4 பிரபலங்களோடு நடந்த கிசுகிசு செய்திகள் இன்றுவரை பேசுபொருளாக உள்ளது. மேலும், பலரின் ஏமாற்றத்தாலும் நடிகை நக்மா இத்தனை ஆண்டுகள் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டை ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.