தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நக்மா திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு திருமணம் செய்யவேண்டாம் என்ற ஆசை இல்லை. எனக்கும் கணவர் , குழந்தைகள் என குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை தான் உள்ளது. ஆனால், எனக்கு வயசு 49 ஆகிறது இந்த வயசில் எனக்கு திருமணம் ஆகுமா என்பது தெரியவில்லை என்றார். இதை கேட்ட ரசிகர்கள் பாவம் இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? என உச் கொட்டி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.