விவாகரத்து ஆகி 25 வருஷம் ஆச்சு… என் புருஷன் இடத்துல யாரையும் நினைக்க முடியல – நளினி தவிப்பு!

Author: Shree
14 November 2023, 6:52 pm

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகை நளினி மீது ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர்.

இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டு, நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது திருமண வாழ்க்கை பற்றியும் தனது கணவரை பற்றியும் பேசிய நளினி ” நானும் என் கணவரும் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். திடீரென இருவருக்கும் விவாகரத்தானது. எங்களுக்கு வாழ்க்கை அப்படி மாறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என் கணவர் தான் என் உலகம் என்று இருந்தேன். 25 ஆண்டுகள் ஆன போதும், என் புருஷன் இடத்துல யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என நளினி மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசி உள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!