தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.
1987-ல் நடிகர் ராமராஜனுடன் அவருடன் ஜோடியாக நடித்த நளினியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தெரிவித்துள்ளார். தான் நடிகையான பின்பு தனது தாய் அவ்வளவு எளிதாக எந்த உணவையும் தனக்கு கொடுக்க மாட்டார் என்றும், மற்றொருவர் சாப்பிடும் போது ஒருவாய் தாங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடும் நிலையில், தான் அப்போது இருந்ததாகவும், தனது அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்து தன்னை அடி பின்னி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாப்பிடுவதற்காகவே திருமணம் செய்ததாகவும், தனது உடம்பினை அவ்வளவாக பேணி பாதுகாப்பது இல்லை என்றும், நன்றாக நடனமாடும் தான் பியூட்டி பார்லர் கூட அந்த சமயத்தில் செல்வது இல்லை என்றும், மேலும் குண்டாக இருப்பது தனக்கு பிடிக்கும் என்பதால் அதற்காகவே தான் ஸ்டெராய்டு போட்டுக் கொண்டதாகவும், உண்மையை உடைத்துள்ளார்.
மேலும், தனது மகன் தனக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிட கூறுவான் என்றும் ஆந்திராவில் சென்று சாப்பிட்டது தான் தற்போது பிபி எகிரி விட்டதாகவும், தனது உணவில் அதிகமாக ஊறுகாய் மற்றும் அப்பளம் இல்லாமல் இருக்காது மருத்துவர் உணவில் உப்பை தவிர்க்க கூறிய காரணத்தால் தற்போது அதனை தவிர்த்து வருவதாகவும், திருமணமான புதிதில், நினைத்ததை அதிகமாக சாப்பிட்டதாகவும் அதுவே தற்போது வரை பழக்கமாக தொடர்ந்து வருவதாக நளினி தெரிவித்துள்ளார்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.