தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.
நடிகை நளினி மீது ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர்.
இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டு, நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், ” நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாய் ஜோசியம் பார்க்க அழைத்து சென்றதாகவும், ஜோசியத்தில் இருவரும் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவார்கள் என சொன்னதாக தெரிவித்தார்.
மேலும், ராமராஜனும், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். திருமணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம் எனவும், அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம் என நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது புகழ் போயிடும் என்று அவர் கணித்தார்.
நானோ, ”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா… நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார்.
ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர், இருவருமே நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கின்றனர், நளினியும் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் மனைவியை பிரிந்த நேரமோ என்னமோ ராமராஜன் சினிமாவில் ஜொலிக்கவில்லை என பேசப்படுகிறது, கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கொள்கை கொண்ட ராமராஜன் விவாகரத்துக்கு பின்னர் 3 படங்கள் மட்டுமே நடிக்க படம் தோல்வியையே சந்தித்தது.
இதைப்போல பலரும் பேசியதாகவும், அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக தாங்களே சந்தோசமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் இன்றுவரை தன் கணவரை புகழ்ந்தே பேசிக்கொண்டிருக்கிறார் நளினி, இன்று வரை தன் கணவன் மீதான் காதல் குறையவில்லை என நெகிழ்கிறார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.