குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை முயற்சி…. கோரமான சம்பவத்தை கூறும் நளினி!
Author: Rajesh22 December 2023, 9:39 am
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகை நளினி மீது ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர்.
இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டு, நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்து ஆனாலும் நடிகை நளினி பல்வேறு பேட்டிகளில் தனது கணவர் குறித்து மிகுந்த மரியாதையோடு பேசுவார். அந்தவகையில் ராமராஜன் உடனான விவாகரத்து குறித்து பேசிய அவர், ” என் கணவரை விட்டு பிரியும்போது என்னால் வாழமுடியும்னு நினைக்க கூட முடியவில்லை.
அப்போது நான் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்தபோது தான் கிருஷ்ணதாசி என்ற சீரியலில் மனோன்மணி என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கேரக்டர் தான் என்னை மீண்டும் தைரியத்தோடு வாழவைத்து என கூறியுள்ளார்.