‘பிரேக் வேணும்’.. நஸ்ரியா எடுத்த அதிர்ச்சி முடிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
13 May 2023, 7:00 pm

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Nazriya Nazim-Updatenews360 (4)

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை நஸ்ரியா தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கபோவதாக நஸ்ரியா அறிவித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.

nasriya nasim - updatenews360
  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!