திருமணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியா?.. உச்சகட்ட விரக்தியில் விவாகரத்து கேட்ட சிம்பு பட நடிகை?..

Author: Vignesh
3 March 2023, 1:30 pm

விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

நானும் ரவுடி தான் படத்துக்கு பின் விக்னேஷ் சிவனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதே தவிர பெரிய அளவுக்கு புகழ் இல்லை.

இவர்கள் இருவரும் பல கோவில்களுக்கு சென்றனர். திருப்பதி கோவிலுக்கு செருப்பு அணிந்து கொண்டது சர்ச்சையானது. இவர்களை சுற்றி சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் தொடர்ந்தன.

இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு நயன் தாயானார். அந்த சர்ச்சையும் ஒரு வழியாக ஓய்ந்தது.

பின்னர் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தை ஒடிடியில் வெளியட முயன்றார். டாக்குமெண்டரி போல இணையதளத்தல் வெளியிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து பணத்தை கொட்டி இரைத்த பிறகு அது தோல்வியில் முடிந்தது.

பின்னர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைந்து பரியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதை நன்றாக இல்லை என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் விக்கியை ஒதுக்கினர்.

ஒரு பக்கம் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி தோல்வியை தழுவின. இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இதையடுத்து ஒரு சாமியாரின் உதவியுடன் ஜோதிடம் பார்த்து இவர்கள் படும் துன்பங்களுக்கு காரணம் என்ன என்று கேட்ட போது, திருமணம் செய்த நேரம் சரியில்லை என கூறியுள்ளார்.

அதற்கு பரிகாரமாக இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக சமூக வலைளதளங்களில் தகவல் வெளியானது.

இதனிடையே, திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் எந்த படமும் சரியாக ஓடவில்லை. அதுமட்டுமின்றி கையில் இருந்த இரண்டு திரைப்படங்களும் கை நழுவிச் சென்றது.

nayanthara- updatenews360.jpg 2

இதனால் நயன் விக்கி பிரிய போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவரிடம் இருந்து வெளிவரவில்லை. இவர்களுக்கு திருமணமான ஒரு மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றனர் என்று ஒரு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 602

    1

    0