இத்துணூண்டு டிரெஸ்-க்கு இவ்வளவு விலையா.. நயனின் அந்த ஆடை விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
24 January 2024, 5:44 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

nayanthara-vignesh 2

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

nayanthara

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பை தாண்டி தயாரிப்பு நிறுவனம் உடலுக்கு தேவையான அழகு சாதனங்கள், ஸ்கின் கேர் சம்பந்தமான பல ப்ராடக்ட் என்று பல தொழில்களை நடத்தி கோடிகளின் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில், கூட 9 ஃபெமி என்ற நாப்கின்களை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், நயன் அணியும் ஆடை பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, நயன்தாரா அணியும் மேல் உள்ளாடையின் விலை மெக்சிகன் டாலர் படி சுமார் 1700 விளையாம். அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7000 ரூபாய் மதிப்புள்ள உள்ளாடையை தான் நயன்தாரா பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Actor Arrest For Drunk and Reckless Driving போதையில் அத்துமீறிய பிரபல நடிகர் கைது.. காரில் தப்பியவரை விரட்டி பிடித்த போலீஸ்!
  • Views: - 434

    0

    0