அப்பப்பா.. இத்தனை கோடியா?.. ஜெட் விமானம் To லிப் பாம் கம்பெனி – நயன்தாராவின் Property value..!

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நயன்தாரா The lip balm company ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கென தனி ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கணவருடன் அவ்வப்போது கொச்சி, ஹைதராபாத், மும்பை என ட்ரிப் அடிப்பார். அது தவிர அவரிடம் BMW 5s, Mercedes GLS 350 D, BMW 7 series, Toyota Innova Crysta என கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 5 கோடி. இது தவிர சென்னையில் பங்களா, தனி வீடு, கேரளா , ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் கார் பார்க்கிங் உடன் கூடிய வசதியான வீடுகள் உள்ளது.

ஆக மொத்த சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி என நடத்தி வந்த நயன்தாரா அண்மையில் Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலையும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

2 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.