பிளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது.. கிளாமர் ரூட்டில் இறங்கிய நயன்தாரா..!

Author: Vignesh
11 July 2024, 5:00 pm

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.

nayanthara - updatenews360.jpg 2

முன்னதாக கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது. அதாவது, சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதற்குப் பின் பேட்டிகள் கொடுப்பதிலும் பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதிலும் நயன்தாரா தவிர்த்து வந்தார்.

nayanthara - updatenews360.jpg 2

இந்நிலையில், நயன்தாரா போயஸ் கார்டனில் வீடு ஒன்று சமீபத்தில் வாங்கி இருந்தார். தற்போது, அந்த வீட்டில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்து வருகிறார். 39 வயதை எட்டிய நடிகை நயன்தாரா இன்னும் குறையாத கிளாமரில் ரசிகர்களை வசியம் செய்யும் படியாக புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

nayanthara - updatenews360.jpg 2
  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!