விக்கி எனக்காக பண்ண விஷயம், காசுக்காக இல்லை.. எது பண்ணாலும் தப்புன்னு பேசுறாங்க.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா..!

Author: Vignesh
21 December 2022, 5:08 pm

நாளை (22-ம் தேதி) திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

‘கனெக்ட்’படத்தையொட்டி நடிகை நயன்தாரா அளித்துள்ள நேர்காணலில் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் தான் திரைத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது.

திரைத் துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவமே தரப்படவில்லை என்றும், ஓர் இசைவெளியீட்டு விழாக்களுக்குச் சென்றாலுமே கூட முக்கியத்துவம் எதுவுமில்லாமல் நடிகைகளை ஓரமாக உட்காரவைத்துவிடுவதாகவும், அதனாலேயே தான் எந்த நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

nayanthara- updatenews360.jpg 2

பெண்கள் திரைத் துறையில் சமமாக நடத்தப்பட வேண்டும் என தான் ஆசைப்பட்டதாகவும், தற்போது பெண்களை மையப்படுத்தும் படங்கள் வருவதாகவும், அதற்கு தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளதாகவும், 15, 20 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில், அதில் 5 படங்கள் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரத்தை தழுவி வெளியாவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ‘‘ஆரம்ப காலக் கட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் கூட தன் மீது விமர்சனங்கள் இருந்து வருவதாகவும், அண்மையில் ‘கனெக்ட்’ படத்தின் ஒரு காட்சியிலிருக்கும் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து, அது வைரலானது.

nayanthara- updatenews360.jpg 2

‘வெயிட் போட்டால் வெயிட் போட்டீங்க எனவும், ஒல்லியாக இருந்தால் ஒல்லியாகிவிட்டீர்கள்’ என விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். கனெக்ட் படத்தின் அந்தப் புகைப்படத்தை பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உடலமைப்பில்தான் இருந்தேன். அது தான் வைரலானது. எது செய்தாலும் தவறு என தற்போது ஆகிவிடுகிறது. பொதுவாக, என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி யோசிப்பதுமில்லை” என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

nayanthara - updatenews360.jpg 2

விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா பேசுகையில், “தன்னுடைய காதலெல்லாம் தன் கணவர் என்றும், எப்போது தாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக விக்னேஷ் சிவன் இருக்கிறார் என்றும், அவருடன் இருக்கும்போது தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், என்ன நடந்தாலும் அவர் பார்த்துகொள்வார் என்ற தைரியம் தனக்கு வந்துவிட்டதாக” நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 548

    3

    0