பிரபல நடிகையை கழட்டிவிட்ட RJ பாலாஜி : தோழிக்காக சகுனி வேலை பார்த்த நயன்தாரா…?

Author: Admin
27 June 2024, 11:56 am

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது.

2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்து RJ பாலாஜி தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே எப்போதும் சுமுகமான உறவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த திரிஷா தான். நயன்தாரா வந்த பிறகு பாதாளத்திற்கு திரிஷாவின் நிலைமை திரைத்துறையில் மோசமாக மாறியது. அதன் பின்பு நயன்தாரா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகும் கேப்பில் ஒட்டுமொத்த தென்னிந்திய மார்க்கெட்டையும் தன் கைவசம் கொண்டு வந்து விட்டார் திரிஷா.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டில் த்ரிஷா தான் கதாநாயகி என்று ஒரு அளவுக்கு ஊர்ஜிதமான நிலையில், த்ரிஷா வாய்ப்பை பிடுங்கி தன்னுடைய நெருங்கிய தோழி ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். யார் அந்த தோழி நடிகை என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கலாம். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் நயன்தாராவோடு ஜவ்வு போல் ஒட்டிக்கொண்ட சமந்தா தான் அந்த நடிகை. மாசாணி அம்மன் படத்தில் சமந்தாவின் நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று தகவல் சமூக வலைத்தளங்கில் பரவி வருகிறது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 186

    0

    0