அரைநாள் ஷூட்டிங்.. 5 நிமிஷ சீன் தான்.. ஆனா தமிழ்நாடே உங்கள பத்தி பேசும்.. நடிகைக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்..!

Author: Rajesh
9 April 2023, 5:30 pm

1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை நீலிமா ராணி. தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தமிழில் நான் மகான் அல்ல, மொழி, குற்றம் 23 போன்ற சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரங்களில் தனது expression மற்றும் லுக் மூலம் ரசிகர்களிடையே நல்ல பிரபலம் அடைந்தார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது போட்டோஷூட் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் என்.எஸ் பொன்குமார் அழைத்தப்போது படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு உங்கள் கதாபாத்திரம்தான் மக்களால் அதிகமாக பேசப்படும் என கூறியுள்ளார்.

இதை கேட்ட நீலிமா, எவ்ளோ நாள் சார் கால்ஷூட் வேணும் என கேட்க, அரை நாள் போதும் என கூறியுள்ளார் இயக்குனர். அரைநாளை வைத்து என்ன எடுப்பார் என யோசனையுடன் படத்தில் நடித்து கொடுத்துள்ளார் நீலிமா ராணி. இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

படம் முழுக்க கெளதம் கார்த்தி தனது அம்மாவை குறித்து பேசி கொண்டிருப்பதால் 5 நிமிடம் வந்தாலும் அந்த அம்மா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வலுவாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் சொன்னது போல் படம் பார்த்தவர்கள் நீலிமாவின் கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

  • Love for Kayadu.. he composer who shocked the film crew கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?