நடிகை எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா மற்றும் நிரோஷா, ராதாரவி என எல்லோரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள். ஆனால், தங்களுக்குள் நடந்த க்யூட்டான சில மலரும் நினைவுகள் குறித்து நிரோஷா தற்போது பேசி உள்ளார். எம் ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் தாலி பொண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா அவருடைய அப்பாவுடன் 3 வயது குழந்தையாக நடித்து இருப்பார். மேலும், 100 க்கும் மேற்பட்ட படத்திலும் நடித்துள்ளார். நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்துள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் தான் முதன்முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கை நிரோஷாவை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதாவது அந்த படத்தில் அதிகப்படியான முத்தக் காட்சிகள் இருந்ததாம். ராதிகாவின் தங்கை பட வாய்ப்புக்காக இப்படி நடிக்க தொடங்கி விட்டாரே என்ற சர்ச்சைகளும் எழுந்ததாம்.
இதனிடையே, நிரோஷா ஒரு பேட்டியில், தன்னுடைய அக்கா ராதிகா குறித்து பேசி உள்ளார். அதில், ஒரு முறை என் அக்கா வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது, நானும் வருகிறேன் என்று உடன் கிளம்பினேன். சரி வா என்று கூட்டிச் சென்றார். அங்கே ஒரு கடையில் ஒரு பெண்ணுக்கு மூக்குத்திக் கொண்டு இருந்தார்கள். அப்போ அந்த பொண்ணு அழுது கொண்டிருந்தது. அடுத்ததாக அந்த பொண்ணுக்கு முடிந்ததும், என் அக்காவை அந்த கடைக்காரர் வாங்க மேடம் என்று அழைத்தார். இப்போது, மாதிரி அப்போதெல்லாம் கன் சூட் கிடையாது. ஊசியில் தான் மூக்குத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், அக்கா நாங்க ரெண்டு பேர் வந்திருக்கோம். முதல்ல என் தங்கைக்கு குத்துங்க அப்படின்னு சொல்லிட்டார். எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. எனக்கு அப்போது மூக்குத்தும் ஐடியாவே கிடையாது. நான் அப்போ வேண்டாம் அக்கா என்று சொன்னேன். ஆனால், எங்க அக்கா மூக்குத்திக்கனும் என்று கறாராக சொல்ல மறுப்பு சொல்ல முடியவில்லை. பிறகு எனக்கு மூக்கு குத்தும் போது நான் பட்ட வேதனையை பார்த்து அவர் மூக்கு குத்தாமல் எனக்கு மட்டும் மூக்கு குத்துனது போதும் என்று சொல்லி அதற்காக பில் பே பண்ணிட்டு என்னை கூட்டிட்டு வந்து விட்டார் என்று சிரித்தபடியே அவரை நம்பி போனதால் நான் பட்ட வேதனை இருக்கே என்று எமோஷனலாக பேசி இருந்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.