நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

Author: Shree
26 August 2023, 12:22 pm

மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை நித்யா மேனன் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.

அதன் பின்னர் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்தார். இவர் பின்னணி படகியாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான 180 படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

அதைத்தொடர்ந்து வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இந்நிலையில் தற்போது 35 வயதாகும் நித்யா மேனன் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

அதன்படி தனது சிறுவயது நெருங்கிய நண்பர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளாராம். அந்த நபர் மலையாள மொழிப்படங்களில் கூட நடித்துள்ளாராம். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் இதுகுறித்து நித்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?