Weekend mode ஸ்டார்ட் பண்ணிவிட்டுட்டாங்க.. Full Heart காட்டி pulse’ஐ சீண்டி பார்க்கும் நிவேதா பெத்துராஜ்!!
Author: Rajesh16 July 2022, 2:35 pm
படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கிருந்தார்.
பல படங்களில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது ஓய்வு காலத்தில் இருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில், பச்சை கலரு உடை அணிந்து, சில Hot போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. . இதனை பார்த்த ரசிகர்கள், “ஜிங்குச்சா, ஜிங்குச்சா.. பச்சை கலரு ஜிங்குச்சா..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இவர் 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. ஆனாலும் தமிழ் சினிமா உலகில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.