தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்குது.. திமுகவுக்கு எதிராக நடிகை நிவேதா பெத்துராஜ்?

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 12:28 pm

மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்து பள்ளி கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் களமிறங்கியது நடிகை நிவேதா பெத்துராஜ்.

2015ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த மிஸ் இந்தியா யுஏஇ போட்டியில் பட்டத்தை வென்ற நிவேதா, தொடர்ந்து மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட் 2015 போட்டியிலும் பங்கேற்று டாப் 5 இடத்தில் இடம்பெற்றார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் தனது சினிமா பயணத்தை துவக்கிய அவர், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: பிரபல இயக்குநர் உடல் அழுகிய நிலையில் மீட்பு… அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்தநிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிவேதா பதிவிட்ட மெசேஜ் பரபரப்பாக பேசப்படுகிறது. அடையாறு சிக்னலில் காரில் தான் காத்திருந்த போது, அங்கு வந்த 8 வயது சிறுவன் தன்னிடம் பணம் கேட்டதாகவும், சும்மா பணம் தர முடியாது என கூறியோது, ஒரு புத்தகத்தை கொடுத்து 100 ரூபாய் கேட்டதாகவும், நான் 100 ரூபாய் எடுக்க முயன்ற போது எனக்கு 500 ரூபாய் கொடுங்க என அந்த சிறுவன் கேட்டான்.

உடனே நான் அந்த புத்தகத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த 100 ரூபாயை சிறுவன் கையில் இருந்து எடுத்தேன். அதற்குள் அந்த சிறுவன் என் கையில் இருந்து 100 ரூபாயை பிடுங்கிக் கொண்டு புத்தகத்தை என் காரில் தூக்கி வீசிவிட்டு ஓடிவிட்டடான்.

இது போல ஆக்ரோஷமாக பிச்சை எடுப்பது இங்கு எல்லா இடங்களிலும் நடக்கிறதா? இது குறித்து கருத்து சொல்லுங்கள் என நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார்,.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 167

    0

    0