உன்ன கொன்னுடுவேன்.. அதை செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்க்கு மிரட்டல் விடுத்த நபர்..!

Author: Vignesh
1 July 2024, 5:12 pm

அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார். முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

nivetha pethuraj - updatenews360

இதனால், தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

nivetha pethuraj - updatenews360

இந்தநிலையில், சமீபத்தில் பேட்டிஒன்றில், கலந்து கொண்டு பேசிய நிவேதா பெத்துராஜ் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் கூறியது எனக்கு பிளம் லிப்ஸ் வேண்டுமென ஆசைப்பட்டு என்னுடைய மருத்துவரிடம் போய் இன்ஜெக்ஷன் போட முடியுமா என கேட்டேன். அதற்காக உன்னை கொன்னுடுவேன். உனக்கு இதுவே நல்லா இருக்கிறது என்று சொன்னார். ஆனால், பாலிவுட் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே முகத்தை சர்ஜரி செய்து மாற்றிக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அது நல்லதல்ல நித்யா மேனன், சாய்பல்லவி போன்ற நடிகைகள் அவற்றையெல்லாம் செய்யாமலே அழகாக இருக்கிறார்கள் என்று நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!