காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகல் :இனி இவருக்கு பதில் இவரா?..
Author: Vignesh5 June 2023, 2:04 pm
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர்.
டாப் சீரியல்கள் விஜய் டிவி லிஸ்டில் எடுத்தால் அதில் காற்றுக்கென்ன வேலி வந்துவிடும், அந்த அளவிற்கு அழகான சீரியலாக மக்களால் கொண்டாடப்படும், இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது. கதை என்னவோ பிரிந்த வெண்ணிலாவும் சூர்யாவும் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.
இந்நிலையில், இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுஜாதா சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வீனா வெங்கடேஷ் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இவர் தான் முதன் முதலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஆனால், திடீரென இவர் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக நடிகை சுஜாதா மீனாட்சியாக நடிக்க வந்தார். தற்போது சுஜாதா சீரியலில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மீண்டும் வீனா வெங்கடேஷ் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.