களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா.

அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.

பின்னர், படவாய்ப்புகளுக்காக படுக்கைகைக்கு அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது ரொம்ப தப்பான விஷயம்… இது ஜஸ்ட் சினிமா… உங்களுடைய தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்லை. அப்படியான விஷயங்களை வெளியில் தைரியகமாக சொல்லவேண்டும். அப்படி நடிப்பதற்கு சும்மாவே இருக்கலாம். இந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என்றார்.
கடைசியாக ஓவியா லெஸ்பியன் என்று செய்திகள் வெளிவருகிறதே அது உண்மையா? என கேட்டதற்கு…. அது உண்மையில்லை. நான் இப்போது வரை ஆண்களோடு தான் உறவு வைத்துக்கொள்கிறேன். என்னுடைய உறவு முறை எப்போதும் இயற்கைக்கு நேராக தான் உள்ளது மாறாக அல்ல. நல்லவேளை நான் ஓரனச்சேர்க்கையாளராக ஆகவில்லை என மனதில் பட்டத்தை வெளிப்படையாக முகம் சுளிக்காமல் பதில் சொல்லி அதிர வைத்தார்.