துரத்திய காதல் தோல்வி.. ஒரு ப* இல்லனா இன்னொரு ப* வரும்…! மனம் திறந்த நடிகை ஓவியா..!
Author: Vignesh19 December 2022, 4:00 pm
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.
அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஓவியாவிடம் எந்த மாதிரி கேள்வி கேட்டாலும் அதற்கு ஓப்பனாக பதில் அளித்துவிடுவார். இதனாலே இவருக்கென்று, தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம்.
தற்போது, ஓவியாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு ஓபனாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை ஓவியா, ” காவல் தோல்வியானால் கவலை இல்லங்க…ஒரு பஸ் இல்லனா இன்னொரு பஸ் வரும் என்றும், அதற்காக காத்திருங்கள் கண்டிப்பாக நல்ல நபர் வருவார்கள் எனறும், காதல் முடிந்துவிட்டால் வாழ்க்கையே முடித்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லங்க..
எல்லாத்தையும் தூக்கிபோடுங்க உங்கள் மேல அன்பாக இருப்பவர்களிடம் அன்பாக இருங்கள் என்றும், கண்டிப்பாக உங்களுக்கான சரியான நபர் வருவார்” என தெரிவித்துள்ளார். மேலும் பூமர் அங்கிள் எனும் திரைப்படத்தில் நடிகை ஓவியா நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.