அந்த ஆசைக்கு அலையக்கூடாது….32 வயதாகியும் திருமணம் செய்யாத ஓவியா – காரணம் இதுதான்!
Author: Rajesh9 February 2024, 11:51 am
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.
ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 32 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என கேட்டதற்கு, நான் சிங்களக இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இன்னொருவர் தேவையில்லை. திருமணம் என்பது சரியான நேரத்தில் அமையவேண்டும். நாம் அதன் பின்னால் போக கூடாது. திருமணம் நடந்தால் ஓகே. அப்படி இல்லை என்றாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன். நான் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நான் தனியாக இருப்பதை தான் விரும்புகிறேன் என ஓவியா அந்த பேட்டியில் கூறினார்.