அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2025, 2:23 pm
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்க : அடக்கடவுளே..!சிம்பு பட நடிகையா இவுங்க..வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
திரிஷா, அர்ஜூன் தாஸ் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இதற்காக அவர் பின்னணி இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதனிடையே குட் பேட் அக்லி படத்தில் டி ராஜேந்தர் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் டி ராஜேந்தர் பாடியுள்ளதாகவும், அதே போல குட் பேட் அக்லி படத்தில் டிஆர் பாடலை பாடியுள்ளதாக கூறினார்.
மேலும் ஒவ்வொரு நாளும் குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார். சின்ன ரோலுக்காகவோ அல்லது பாடலுக்கா என்பது தெரியவில்லை. ஆனால் இதை படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது என கூறியுள்ளார்.