அடப்பாவமே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே.. சீரியல் நடிகரின் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Author: Vignesh17 August 2024, 2:24 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் முடிந்து அதில், நடித்த நடிகர் நடிகைகள் வேற சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில், ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பவித்ரா ஜனனி பழைய நினைவுகள் தொடர்பான புகைப்படங்களை தற்போது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பவித்ராவுக்கு ஜோடியாக நடிகர் திரவியம் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் சாக் கொடுத்து இருக்கிறார். அதில் திரவியம் பெண் வேடத்தில் உள்ளார். அந்த நடிகரா இது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.