கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. கடந்த கால வாழ்க்கை குறித்து கண்கலங்கிய பிரபல நடிகை..!

Author: Rajesh
27 April 2022, 1:19 pm

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்ல போறோம் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடர்ந்து ‘கோவா’, ‘கோ’, ‘அபியும் அனுவும்’ போன்ற சில தமிழ் படங்களில் பியா நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தெரிந்த முக நடிகையாக மாறினார்.

சமீபத்தில் நடிகை பியா பேட்டி ஒன்று கொடுத்தார். அந்தப் பேட்டியில் கடந்த கால வாழ்க்கை குறித்து கண்கலங்கி பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ளேன். சினிமாவுக்காக நான் வீட்டை விட்டு மும்பை வந்தேன். அப்போது எனக்கு வயது 15 இருக்கும். மும்பைக்கு வந்தபோது எனக்கு தங்க இடமெல்லாம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது, அந்தேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஒருவர் என்னிடம், நான் நாய் ஒன்றை வளர்க்கிறேன். அந்த நாய் இருக்கும் இடம் மிகச் சிறிய அறைதான். உங்களால் அங்கு தங்கிக்கொள்ள முடியுமா… கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு வேறு வழியில்லை. அதனால், நான் அந்த நாயுடன் 9 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கினேன் என்று கூறும்போதே கண்கலங்கினார். இப்போது அந்த அறையை விட என் கழிப்பறை கூட பெரியதாகிவிட்டது. ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும் என்றார்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 1277

    1

    1