திடீர் திருமணத்திற்கு காரணம் MGR… ரத்தத்தில் எழுதியிருந்த அந்த கடிதத்தால் உறைந்துபோன பாக்கியராஜ் மனைவி..!

Author: Vignesh
19 April 2023, 2:53 pm

தமிழ் சினிமாவில் 70 காலத்தில் மும்மணி இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் கே. பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல கலைகள் கொண்டிருப்பவர் பாக்யராஜ்.

k bhagyaraj-updatenews360

16 வயதினிலே படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவரது ரோல் மக்கள் மனதில் நின்றது. அவர் அவர் பேசிய வசனமும் அவரே எழுதியது தான். அதன் பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.

k bhagyaraj-updatenews360

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் மக்களை டிவி முன்பு அமரவைக்கும். இவர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த “பிரவீணா” என்னும் நடிகையை 1981ம் ஆண்டு மணந்தார். இரண்டு வருட மண வாழ்க்கைக்குப் பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்காது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் மீள முடியாமல் இருந்த பாக்யராஜுக்கு குடும்பத்தினர் மீண்டும் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து வைத்தனர்.

தனது திருமணத்தை குறித்து வெளிப்படையாக பூர்ணிமா பேசியுள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில், சில காலம் கழித்து திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தார்களாம். அப்பொழுது பூர்ணிமா கையில் 35 படங்கள் கிட்ட முடிக்காமல் இருந்த நிலையில் பாக்யராஜ் எம்ஜிஆரை சந்தித்து பேசிய போது திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.

k bhagyaraj-updatenews360

உடனே எம்ஜிஆர் இந்த தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ள கூறியுள்ளார். இதற்கு எந்தவொரு மறுப்பு தெரிவிக்காத பாக்யராஜ், பூர்ணிமாவிடம் வந்து கூறியுள்ளார். பின்பு பூர்ணிமா தனது திருணத்திற்கு 3 மாத காலம் இருந்த நிலையில், அவசர அவசரமாக நடித்து கொடுத்துள்ளார்.

k bhagyaraj-updatenews360

இந்த காரணத்தினாலேயே பூர்ணிமா நடிப்பு வேண்டாம் இருந்துள்ளார். இத்தருணத்தில் ரசிகர் ஒருவர் பூர்ணிமாவிற்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியிருக்கிறார். இதனை அவதானித்து சிலிர்த்து போன பூர்ணிமா தனது கணவர் பாக்யராஜிடம் வியந்து கூறியுள்ளார். தற்போது பல ஆண்டுகள் ஆன இவரது பிள்ளைகள் சினிமாவில் வலம் வருகின்றனர்.

k bhagyaraj-updatenews360
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?