“ஆபாச மார்பிங்”…. பழிவாங்கும் நோக்கத்தில் என் மகளை கூட விட்டு வைக்கவில்லை.. ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை சைபர் க்ரைமில் புகார்..!
Author: Vignesh2 January 2023, 11:00 am
பிரபல நடிகையாக மலையாள சினிமாவில் வலம் வந்தவர் நடிகை பிரவீனா. ராஜா ராணி, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவந்தார். மேலும் இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கோமாளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை பிரவீனா, தனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைதொடர்ந்து களத்தில் இறங்கிய காவல் துறையினர், பாக்யராஜ் (23 வயது) என்ற மாணவரை கைது செய்தனர். பின் அவர் சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
இந்நிலையில் பிரவீனா இதுகுறித்து தெரிவிக்கையில், ” நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் மூலம் சிலர் பழிவாங்கும் நோக்கத்தில் என்னுடைய மகள் மற்றும் நண்பர்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து என் மகளும் தற்போது சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.