அப்போ வெறும் 14 வயசு தான்.. திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய வனிதாவின் தங்கை..!(வீடியோ)
Author: Vignesh27 February 2024, 6:12 pm
நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் ஒரு கல்யாணம் வந்து மக்கள் மறந்து கிடந்த அத்தனை பிரச்சினைகளையும் மறுபடியும் நினைவுபடுத்த வைத்திருக்கிறது. அதாவது, ஒரு பக்கம் விஜயகுமார் பேத்தி தியாவின் கல்யாணம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும் அதே நிலையில், அதற்கு சரிசமமாக ப்ரீத்தா பேசிய பேட்டிகளும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாம் மனைவி மஞ்சுளாவின் இரண்டாம் மகள் ப்ரீத்தா சந்திப்போமா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, படையப்பா படத்தில் ரஜினியின் மூத்த மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம், என பல படங்களில் பிரீத்தா நடித்துள்ளார். பின்னர், கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பிரீத்தா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது கணவர் ஹரி குறித்து பேசியுள்ளார். அதில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் நாங்கள் வாழ்க்கையை தொடங்கினோம். இப்போது, வரைக்கும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் உள்ளோம். முன் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் ஹரி உள்ளார்.
22 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவரிடம் இதுவரை நான் எந்த மாற்றத்தையும் பார்த்ததில்லை. அவரை, நான் செல்லமாக டாடி என்று தான் அழைப்பேன். நான் சூர்யாவுடன் சந்திப்போமா படத்தில் நடிக்கும் போது எனக்கு வயது 14 தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அப்போது, அது ஒரு பேஷனாக இருந்ததால், அதில் நடித்தேன். இப்போது, அந்த படத்தை பார்த்தால் சிரிப்பாக வருகிறது என்று பேசி உள்ளார்.