குளு குளு வெண்பனி போல.. பிரியா பவானி சங்கரின் காதலர் தின அவுட்டிங் புகைப்படங்கள்..!
Author: Vignesh14 February 2024, 1:38 pm
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2, ரத்னம், ஜெப்ரா, பீமா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
அண்மையில், கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜவேல் என்பவரை ரொமான்ஸ் செய்தும் அவுட்டிங் சென்றும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று காதலர் உடன் பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். தற்போது காதலர் தினமான இன்று ஸ்விட்சர்லாந்துக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.